search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல் வீரர் தனுஷ்"

    வேளச்சேரியில் நடைபெற்ற 72-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை வீரர் தனுஷ் சாதனைப் படைத்துள்ளார்.
    72-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி நீச்சல் வளாகத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 100 மீட்டர் ப்ரீ ஸ்ட்ரோக் பந்தயத்தில் சென்னை வீரர் தனுஷ் பந்தய தூரத்தை 1 நிமிடம் 04.78 வினாடியில் கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கம் வென்றார்.

    இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் ஜெ.அக்னீஸ்வர் 1 நிமிடம் 05.08 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

    பெண்களுக்கான 800 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பந்தயத்தில் கோவை வீராங்கனை பாவிகா துகார் பந்தய இலக்கை 9 நிமிடம் 34.35 வினாடியில் கடந்து தனது முந்தைய சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றார்.
    ×